கணவரைக் கொல்ல முயன்ற தாதியான மனைவி : கிடைக்கப்போகும் தண்டனை
நோய்வாய்ப்பட்ட கணவரைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனைவியான முன்னாள் தாதி (வயது62)ஒருவரை குற்றவாளியாக அறிவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த செய்தி அவுஸ்திரேலியாவில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான முன்னாள் தாதி ஒருவரே இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
கணவர் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு
குறித்த சந்தேக நபரின் கணவர் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
மேற்கு அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் தனது கணவரைக் கொல்ல முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் செவிலியர் குற்றவாளி என அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
2021ஆம் ஆண்டு வைத்தியசாலையில் தனது கணவருக்கு ஊசி போட்டு இந்தக் கொலையை மேற்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், அந்த முயற்சியால் குறித்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது, ஆனால் பெண்ணின் கணவர் சில மாதங்களில் இறந்தார்.
கிட்டத்தட்ட 8 மணிநேரவிசாரணைக்குப் பிறகு, நடுவர் மன்றம் அந்தப் பெண்ணைக் குற்றவாளி என்று அறிவித்தது. கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |