மின்னல் தாக்கி பெண் பலி..! வவுனியாவில் சம்பவம்
வவுனியா மாமடுப்பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த சந்திரலதா என்ற 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
`
இன்று மாலை குறித்த பெண் வீட்டிலிருந்து தாமரை இலை பறிப்பதற்காக குளத்துபகுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது மின்னல் தாக்குதலிற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்குசென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.