வியாபார நிலையத்தில் ஆடைகளை திருடிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துள்ள முடிவு
கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஆடம்பர சில்லறை விற்பனை நிலையமொன்றில் பெருமளவு ஆடைகளை திருடியதை ஒப்புக்கொண்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதிவியிலிருந்து விலகி முடிவு செய்துள்ளார்.
நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினரான 43 வயதான கோல்ரீஸ் கஹ்ராமன் என்பவரே ஆடைகளை திருடியவராவார்.
சமூக ஆர்வலர்,மனித உரிமைகளுக்காக வாதிடுபவர்
நியூசிலாந்துக்கு அகதியாக வந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி., கோல்ரிஸ் ஆவார். அவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுபவராவார்.
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்காக வாதிட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆடம்பர சில்லறை விற்பனையாளரிடமிருந்து
ஓக்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர சில்லறை விற்பனையாளரிடமிருந்து ஆடைகள் திருடப்பட்டது தொடர்பான காவல்துறையின் விசாரணைக்குப் பின்னர் பதவி விலக கோல்ரிஸின் முடிவு செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டபோது ஆடைகளைத் திருடியதை கோல்ரீஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |