கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண் : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
மட்டக்களப்பு - நெல்லிக்காடு பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (02) உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய கணவரின் சகோதரர் மற்றும் பிரதான சந்தேக நபராக கருதப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருந்துகளை வழங்கிய குற்றச்சாட்டு
அத்துடன், கொள்ளையிடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரண்டு நகையக உரிமையாளர்களும் தொடர்ந்து 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதேவேளை, கொள்ளையர்களுக்கு மருந்துகளை வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு - வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டவரை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையின் தடுப்புக் காவலில் மூன்று நாட்கள் வைத்து தொடர்ந்து விசாரணை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேகநபர்களை அடையாளம் காணும் ஆள் அடையாள அணிவகுப்பு இன்று (03) நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்