இலங்கை தமிழரசு கட்சியின் மகளிர் தின நிகழ்வு!
Kilinochchi
Ilankai Tamil Arasu Kachchi
International Women's Day
By Pakirathan
இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளையின் மகளிர் தின நிகழ்வானது மகளிர் அணி தலைவி கெளசலா ஜெக்காந்தராசா தலைமையில் இன்று (11) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்கள் முதன்மை விருந்தினர் உரையாற்றினார்கள்.
ஈழத்தமிழரும் சமகால அரசியல் போக்கும் எனும் தொனிப்பொருளில் அரசறிவியல்துறை தலைவர் கணேசலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மகளிர் தின நிகழ்வு
இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர், எம். ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசறிவியல்துறை தலைவர் கணேசலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்