தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்

Sri Lanka Police Investigation Death
By Dharu Jul 13, 2026 08:48 AM GMT
Report

களுத்துறை - பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வாடகை வீட்டில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகளில் பல அதிர்ச்சிகர விடயங்கள் வெளியாகியுள்ளது.

நதுனி சஹஸ்ரீ குரே என்ற இளம் பெண்னே இவ்வாறு அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

குறித்த பெண் 27 வயதுடைய ஆணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் அந்த வீட்டில் வசித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

​​பணம் தொடர்பாக வாக்குவாதம்

பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலறை உதவியாளராகப் பணிபுரிந்த குறித்த நபர், சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர் | Woman S Life Lost Due To Extramarital Affair Crime

சம்பவம் நடந்த அன்று இரவு, தனது பணியிடத்திலிருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததாக சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இரவு சுமார் 11.15 மணியளவில் அவர் அறைக்கு வந்து, நதுனி தயாரித்த தேநீரைக் குடித்த பிறகு ஒரு நாற்காலியில் ஓய்வெடுத்துள்ளார்.

அப்போது, ​​பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாதத்தின் நடுப்பகுதி என்பதால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியபோது, ​​நதுனி தன்னைக் கடுமையாக அவமானப்படுத்தியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

தனது தாய் மற்றும் சகோதரியை அவமதித்து பேசியதால் தனக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், அவர் ஒரு கத்தியை எடுத்து அவளது மார்பில் குத்தி, கழுத்தை அறுத்ததாக வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

விமல் உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

விமல் உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

உயிரை மாய்க்க முயற்சி

தனது உயிரை மாய்த்துக்கொள்ள அறையில் இருந்த ஆவியாக்கி திரவத்தைக் குடித்ததாகவும், பின்னர் வீட்டிலிருந்து தப்பி சென்றதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து மொரட்டுவ தொடருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற சந்தேக நபர், கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்தில் மீது குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர் | Woman S Life Lost Due To Extramarital Affair Crime

இதில் அவரது வலது கால் மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் உட்பட பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரைச் சுற்றியிருந்தவர்கள் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இரண்டு நாட்களாக சந்தேக நபரைத் தேடி வந்த காவல்துறை, தேசிய மருத்துவமனையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட நதுனியும் அவரது தாயாரும் சில காலமாக இளைஞர்களை ஏமாற்றி வந்த ஒரு மோசடிக் கும்பலில் ஈடுபட்டு வந்தமை காவல்துறை விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் தம்பதியினர்!

சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் தம்பதியினர்!

பாணந்துரை வடக்கு காவல்துறை

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வவுனியாவில் வசிக்கும் ஒருவர், பாணந்துரை வடக்கு காவல்துறை பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு, தாயும் மகளும் சேர்ந்து தன்னிடம் இருந்து 1.5 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறியுள்ளார்.

தாயும் மகளும் சேர்ந்து தனது வங்கிக் கணக்கிலிருந்து 8 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த இளைஞன் கூறியுள்ளார்.

மேலும், அவர் அவளுக்கு மாதந்தோறும் கொடுத்து வந்த 35,000 ரூபாய் உட்பட, மொத்தமாக கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இளைஞர்களைப் பொறிவைத்து பணம் பறிக்கும் இந்தத் தந்திரம், நதுனியும் அவள் தாயும் சேர்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்திய ஒன்று என்று காவல்துறை கூறியுள்ளது.   

நீர்கொழும்பு சிறை வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு

நீர்கொழும்பு சிறை வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025