11 வயது மகளுடன் போதைப்பொருள் வியாபாரம் செய்த தாய் கைது!
நோய்வாய்ப்பட்ட தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வியாபாரம் செய்த பெண் ஒருவர் இங்கிரிய காவல்துறையினரின் நீதி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிரிய காவல்துறை பிரிவிட்குட்பட்ட நம்பபான பிரதேசத்தில் குறித்த பெண்ணும் குறித்த சிறுமியும் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது சந்தேகநபரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2250 மில்லிகிராம் ஹெரோயின் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விநியோகம்
காவல்துறையினரின் விசாரணையின் போது, குறித்த பெண் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகளை மோட்டார் சைக்கிளில் வைத்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளின் ஆசனத்திற்கு அடியில் 8 கையடக்கத் தொலைபேசிகளும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 150,000 ரூபாயும் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
அதேவேளை, சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, அவருக்கு போதைப்பொருள் வழங்கிய உறுகல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரும் 2180 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் மற்றும் சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறுமி சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |