மனைவியை படுகொலை செய்த கணவன்! தொடங்கப்பட்டது விசாரணை
வெலகெதர காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில், குடும்பத் தகராறைத் தொடர்ந்து 48 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த பெண் ஒருவர், இன்று (06) மாவதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு கொலை செய்யப்பட்டவர், அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குடும்பத் தகராறைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் என நம்பப்படும் சந்தேக நபர், அவரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, 50 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து வெலகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |