யாழில் தாயாருடன் ஏற்பட்ட முரண்பாடு : இளைஞனின் விபரீத முடிவு
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Kajinthan
யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம்(06) இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சிம் அட்டையால் ஏற்பட்ட முரண்பாடு
தாயாரின் அடையாள அட்டையில் சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞன் கோரிய நிலையில் அது முரண்பாடாக மாறியது.

பின்னர் குறித்த இளைஞன் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு வயல் கிணற்றுக்கு அருகே சென்று தீ மூட்டியுள்ளார்.
அதன்பின்னர் வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி