நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார, இன்று (06) நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்
கடந்த மாதம் 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதலில் இருபத்திரண்டு கைதிகளும் பத்து அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

மேலும், இந்த மோதலில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட குழு விசாரித்து, தகுந்த நடவடிக்கை
மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, இழப்பீடு, ஓய்வூதியம் மற்றும் அதிகாரிகள் வாங்கிய கடன்கள் தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
மேலும், மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலை மற்றும் அவர்களின் முழுமையான இயலாமை குறித்து சம்பந்தப்பட்ட குழு விசாரித்து, தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |