விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Wimal Weerawansa Udaya Gammanpila Dilith Jayaweera
By Pavi Aug 06, 2026 06:42 AM GMT
Report

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பதிரண ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த ஆறு பேருக்கும் எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (05.08.2026) உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டு முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, மேற்படி நபர்கள் பகிரங்கமாக வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கும் டெங்கு நோய் தொற்று: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டை உலுக்கும் டெங்கு நோய் தொற்று: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நடைபெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அவர்கள் கருத்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Wimal Udaya Dilith Others Named In Contempt Case

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் குறித்த உண்மைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நே்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அறிக்கையிட்டது.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம், மேற்படி நபர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள், முதற்பார்வையில் நீதித்துறை நடைமுறையை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தது. 

அதன்படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கடும் மன உளைச்சலில் மைத்திரி: கனடாவுக்குத் தப்பியோடிய மருமகள்: மகன் கொழும்பில்...!

கடும் மன உளைச்சலில் மைத்திரி: கனடாவுக்குத் தப்பியோடிய மருமகள்: மகன் கொழும்பில்...!

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட நிறுவனங்கள்

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட நிறுவனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி