யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிச்கை!

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Feb 21, 2025 03:26 AM GMT
Report

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு, கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து குறித்த பெண் மோசடியில் ஈடுபட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, சந்தேகநபரான பெண் தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடி கைது!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடி கைது!

பண மோசடி

கடந்த செவ்வாய்க்கிழமை வீடொன்றுக்கு வேகோ மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடியாக பெற்று சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிச்கை! | Woman Who Targets Foreigners Visiting Jaffna 

பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர் , அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே, அந்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

முறைப்பாடு 

இந்த நிலையில், இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தால், தான் விசாரணை நடவடிக்கைகளால் நாட்டுக்கு திரும்ப முடியாது கால தாமதம் ஏற்படும் என கருதி முறைப்பாடு செய்யவில்லை எனவும் காவல் நிலையத்தில் மோசடி பெண் குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிச்கை! | Woman Who Targets Foreigners Visiting Jaffna

இதன்படி, பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம் , பெண் தொடர்பான அடையாளங்களை காவல்துறையினருக்கு தெரிவித்தமையின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலக்கு வைத்து , நன்கொடைகள் , மருத்துவ உதவிகள் என கோரி வருவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

முடிவை அறிவித்த ஜனாதிபதி அநுர: பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

முடிவை அறிவித்த ஜனாதிபதி அநுர: பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016