கனடாவில் பெண்ணொருவருக்கு அடித்த ஜாக்பாட்!
கனடா - ஒன்டாரியோ மாகாணத்தின் ஃபிட்ஸ்ராய் ஹார்பர் பகுதியில் வசிக்கும் ஷெல்லி எக்ஃபோர்ட் என்ற பெண், பிரபலமான 'Catch the Ace' லொத்தர் சீட்டிலுப்பில் வரலாற்று பரிசை வென்றுள்ளார்.
ரஸ்ஸல் கின் கிளப் நடத்தும் இந்த லொத்தரில் அவர் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசை வென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம்ப முடியாத மகிழ்ச்சி
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஷெல்லி எக்ஃபோர்ட், “இன்னும் நம்ப முடியவில்லை, மிகவும் சந்தோஷமாகவும் நன்றியுடனும் இருக்கிறேன்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Image Credit: CTV News
இந்த சீட்டிலுப்பிற்கு 86,000க்கும் மேற்பட்ட சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, மேலும் நிகழ்ச்சியை நடத்தியது ஒரு தன்னார்வ அமைப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.
லொத்தர் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை சமூக சேவை மற்றும் நன்மை பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 9 மணி நேரம் முன்