ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பேரிடி! ட்ரம்ப் விடுத்த மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவுடன் எந்த வகையான வர்த்தகத்தை நடத்தும் நாடுகளும் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ட்ரம்ப், வர்த்தகக் குற்றச்சாட்டுகள், பரஸ்பர வரிகள் மற்றும் தடை நடவடிக்கைகள் மூலம் பல நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் போர் தொடுக்கையுடன், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரம்
குறிப்பாக, ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை முன்னிட்டு, அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிற நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்தது. ஏற்கனவே 25% வரி விதிக்கப்பட்டிருந்த இந்தியாவுக்கு, ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை காரணமாகக் கொண்டு மேலும் 25% அதிகரிக்கப்பட்டது.
இதனால், மொத்தம் 50% இறக்குமதி வரி இந்தியாவுக்கு விதிக்கப்பட்டது. இந்த உயர் வரிவிதிப்பால் இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
புதிய சட்டமூலம்
இந்த நிலையிலும், வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்கா மீது பொருளாதார தடைகள் நடைமுறைப்படுத்தும் இது எந்தத் தரப்புக்கும் விதிவிலக்கல்ல. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Image Credit: CNN
மேலும், குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் லின்ட்ஸே கிராஹம், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி விதிக்கும் வகையில் ஒரு புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்டமூலத்திற்கு செனட் சபையில் 85 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், மீண்டும் வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 9 மணி நேரம் முன்