நூற்றுக்கணக்கான மக்களுடன் உடைந்து வீழ்ந்த மரப்பாலம்!
people
matara
wooden bridge
fell down
By Thavathevan
மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருந்த போதே பலகையில் செய்யப்பட்டுள்ள குறித்த பாலம் இன்று உடைந்து விழுந்துள்ளது.
கடலின் குறுக்கே விகாரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் பொதுமக்களுடன் சேர்ந்து உடைந்து விழுந்தமையினால் உதவுமாறு மக்கள் கத்தி கூச்சலிடும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
ஆயினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி