சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண புதிய ஆணைக்குழு
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் தொழில்சார் நிபுணத்துவ மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட விசேட ஆணைக்குழுவை அமைக்கும் பணிகள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரச துறையில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் சம்பள உயர்வு பிரச்சினைகள் மற்றும் தொழில்முறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த ஆணைக்குழு செயல்படவுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு
2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் சம்பளத்தின் முரணான கருத்துக்களை நீக்கி அவர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் வகையில் விசேட ஆணைக்குழுவொன்றை அமைப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.

இதன்படி அரச ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |