இலங்கையில் பணிபுரியும் பெண்களை அதிகளவில் தாக்கும் நோய் ஆபத்து : வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
Breast Cancer
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Kathirpriya
இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
45 முதல் 65 வயது வரையிலான பெண்களே அதிகளவு ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைந்த மட்டத்திலேயே சோதனைக்கு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் இந்த நிலை மோசமாகியுள்ளதாகவும் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளில் 26 பேர் மார்பகப் புற்றுநோயாளிகளாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை பெற இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பை காண்க.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்