உலக உட்புற சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிவாகை சூடிய அமெரிக்கா
United States of America
By Beulah
ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக உட்புற சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அமெரிக்கா 12 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் உலகின் அதிவேக ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுடன் பட்டத்தை வென்றது.
2025 ஆம் ஆண்டு உலக உட்புற சாம்பியன்ஷிப் போட்டி

ஆடவருக்கான 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கமும், பெண்களுக்கான 100 மீ. ஓட்டத்தில் 23 வயதான ஷகாரி ரிச்சர்ட்சன் தங்கமும் வென்றனர்.
பதக்க அட்டவணையின்படி, இரண்டாவது இடத்தை கனடாவும், மூன்றாவது இடத்தை ஸ்பெயினும் பெற்றுள்ளன. இலங்கையும் 3 போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், 2025 ஆம் ஆண்டு உலக உட்புற சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.