மருந்து கொள்வனவுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி அனுமதி - அலிசப்ரி
help
world bank
srilankan economic crisis
medicine crisis
medicine import
By Kanna
நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இலங்கை அரசாங்கம் முன்வைத்த மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி கோரிக்கைக்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அத்தியாவசிய மருந்துகளின் கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு போதே அவர் இவ் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிப்பதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி