மரணங்கள் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 21 வீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பதிவான 69,000 உயிரிழப்புகளில் அதிகமானது அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த இரண்டு வாரத்தில் உலகளாவிய கொரோனா தொற்று சம்வங்கள் 200 மில்லினை தாண்டக் கூடும் என்று அந்த அமைப்பு எச்சரிதுள்ளது.
கொவிட்-19 தொற்று சம்பவங்களும் 8 வீதம் அதிகரித்திருப்பதோடு தற்போது உலகெங்கும் பதிவான மொத்த நோய்த் தொற்று சம்பவங்கள் சுமார் 194 மில்லியனாக உள்ளது.
ஐரோப்பாவை தவிர உயிரிழப்பு எண்ணிக்கை அனைத்து பிராந்தியங்களிலும் அதிகரித்துள்ளது. .
‘கடந்த வாரத்தில் 100,000 மக்கள் தொகையில் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை அமெரிக்காஸ் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் காணமுடிகிறது.
அங்கு 100,000 மக்கள் தொகையில் 2.8 மற்றும் 1.1 வீதம் புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன’ என்று உலக சுகாராத அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் அதிகபட்ச நோய்த் தொற்று சம்பவங்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, பிரிட்டன் மற்றும் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரேசிலில் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அதேநேரம் இந்தோனேசியா மற்றும் பிரிட்டனில் நோய்த் தொற்று சம்பவங்கள் குறைந்து வருகின்றன.