சிம்பாவே சென்ற இலங்கை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா..!
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நேற்று (10.06.2023) அதிகாலை சிம்பாப்வேவை சென்றடைந்தது.
உலகக்கிண்ண போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் (09) பிற்பகல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சிம்பாபே சென்றுள்ள இலங்கை துடுப்பாட்ட அணி வீரர்களுக்கு 3 மணித்தியாலங்களுக்கு மேல் தங்குமிட வசதிகள் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கிண்ண தகுதிச் சுற்று

இந்த தகவலை உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிக்கு சென்றுள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர் மகேஷ் தீக்சன தனது உத்தியோக பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் காரணமாக சிம்பாப்வே துடுப்பாட்ட நிர்வாகம் மற்றும் சர்வதேச துடுப்பாட்ட வாரியம் என்பவற்றை மேற்கோள்காட்டி சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

