செம்மணியில் எழும் எலும்புக்கூடுகளின் குரல் உலகிற்குக் கேட்கிறதா?

By Theepachelvan Jul 30, 2026 12:15 PM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

கதைகளிலும் கவிதைகளிலும் வருவதைப் போலாக நிகழ்கிறது செம்மணி. மாவீரர்களின் தியாகம் மண்ணுக்குள் இருந்து எங்கள் கனவையும் தாகத்தையும் சொல்கிறது. அப்படித்தான் செம்மணியும். ஈழ நிலமே பேசுகிற குரலுள்ள நிலம்.

ஈழக் கதையொன்றில் காணாமல் ஆக்கப்பட்ட மனிதனொருவன் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டு, அவனை அடையாளம் காணாத நிலையில் மீண்டும் மண்ணுக்குள் புதைத்துவிடுவதாக கதை முடிகிறது. ஈழ நிலத்தில் வெளிவரும் புதைக்குழிகளின் கதைகளும் அப்படித்தான் முடிகின்றன.

உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

471 மனித எலும்புத் தொகுதிகள்

ஆனால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனித உடல்கள் பேசத் தொடங்கினால், அவை என்ன சொல்லும்? தம்மைக் கொன்றவர்களின் பெயர்களையா? தமக்காக இன்னும் காத்திருக்கும் தாய்மார்களின் கண்ணீரையா? அல்லது, தங்களை மறைத்துவிட்டு உலகத்தின் முன் நீதியைப் பற்றி பேசும் அரசின் இரட்டை முகத்தையா? ஆம், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தியில் மண்ணிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் மனித எலும்புக்கூடுகளுக்கு ஒரு மொழியிருக்கிறது. அவைகளின் குரல்மொழி நமக்குக் கேட்கிறதுதான்.

அவற்றின்  மொழி துயரத்தின் மொழி. அவற்றின் குரல் நீதியைத் தேடும் குரல். இதுவரை 471 மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அண்மையில் உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, இந்த மண் இன்னும் எத்தனை சொல்லப்படாத கதைகளைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது என்பதைச் சொல்கிறது.

செம்மணி என்பத வெறுமனே மனித புதைகுழியின் அகழ்வுத் தளம் மட்டுமல்ல, அது இலங்கையின் போர்க்கால வரலாறு, கட்டாயக் காணாமலாக்கங்கள், இரகசியப் புதைகுழிகள், தண்டனையின்றி தொடர்ந்த அரச வன்முறை ஆகியவற்றின் உயிருள்ள சாட்சி.

ஒவ்வொரு எலும்புக்கூடும் ஒரு மனிதனின் இறப்பை மட்டும் சாட்சியப்படுத்தவில்லை. இலங்கைத் தீவில் தமிழ் குடிமகன் ஒருவனின் இருப்பின் நிலையை இனவழிப்பு குறித்த உண்மையை மறைக்க முயன்ற அரசியல் வரலாற்றின் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு செம்மணி அகழ்வுத் தளத்தைப் பார்வையிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது.

அந்தச் சந்திப்பில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை; அதற்கான சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்ற கோரிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செம்மணியில் எழும் எலும்புக்கூடுகளின் குரல் உலகிற்குக் கேட்கிறதா? | World Hear The Voices Skeletons Rising Semmani

கிரிஷாந்தி படுகொலை

ஆனால் செம்மணியின் குரலுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்குமா என்ற கேள்வி இன்னும் அப்படியே உள்ளது. செம்மணியின் மண்ணிலிருந்து எழும் இந்த எலும்புக்கூடுகளின் அமைதியான சாட்சியத்திற்கு சர்வதேச சமூகம் இறுதியாக செவிசாய்க்குமா?

அவற்றின் மொழிக்கும் குரலுக்கும் உரிய மதிப்பளித்து, உண்மையையும் நீதியையும் நிலைநாட்டும் நடவடிக்கைகளை எடுக்குமா? அல்லது, இந்த எலும்புகளும் உலக அரசியலின் மௌனத்திற்குள் மீண்டும் ஒருமுறை புதைக்கப்படுமா?

1998ஆம் ஆண்டு கிரிஷாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கின் விசாரணைகளின்போது, தண்டனை பெற்ற இலங்கை இராணுவ உறுப்பினர் சோமரத்தின ராஜபக்ச, நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

அந்த ஒப்புதல் உலகின் கவனத்தை ஈர்த்தபோதும், முழுமையான உண்மையை வெளிக்கொணரும் எண்ணம் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அரசின் படைகள் நிகழ்த்திய இக் குற்றம் பற்றிய உண்மையை அரசு மறைக்கவே முயலும். அதுவே சர்வதேச தலையீட்டின் அவசியத்தை இன்றும் கோரி நிற்கிறது.

செம்மணியில் எழும் எலும்புக்கூடுகளின் குரல் உலகிற்குக் கேட்கிறதா? | World Hear The Voices Skeletons Rising Semmani

 புதைக்கப்பட்ட செம்மணி

ஏனெனில் அன்றைய காலத்தில் குறுகிய அளவிலான அகழ்வுகள் உண்மையின் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தின. அதன் பின் செம்மணி மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது.

ஆனால் உண்மையை புதைக்க முடியாது என்பதற்கச் சாட்சியாகவே செம்மணி இன்று பேசுகிறது. அது உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கண்ணீரிலாலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் போராட்டங்களாலும் உயிர்பெறுகிறது.

அந்த வகையில் இன்று மீண்டும் அகழ்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய எலும்புகள் வெளிவருகின்றன. ஒவ்வொரு எலும்பும் ஒரு மனிதனின் வாழ்வை மாத்திரமின்றி அதன் பின்னாலுள்ள ஒரு குடும்பத்தின் காத்திருப்பையும், ஒரு சமூகத்தின் தீராத துயரத்தையும் சாட்சியமாக்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு செம்மணி அகழ்வுத் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றும் அவர்கள் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை என்பதையும் சர்வதேசம் தமக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் புலப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை பல ஆண்டுகளாக அவர்கள் இதையே உலக நாடுகளிடமும், ஐக்கிய நாடுகள் சபையிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.  

செம்மணியில் எழும் எலும்புக்கூடுகளின் குரல் உலகிற்குக் கேட்கிறதா? | World Hear The Voices Skeletons Rising Semmani

பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!

பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!

உலகின் செவிகளுக்கு கேட்குமா?

பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் உண்மையை வெளிக்கொணரவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் எந்த அரசும் தயாராக இருக்கவில்லை என்பதால்தான் இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைகள் மீதான நம்பிக்கையை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முழுமையாக இழந்துவிட்டனர்.

எனவே செம்மணியில் கிடைக்கும் ஒவ்வொரு மனித எலும்புக்கும் சர்வதேச தரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதாரங்கள் அனைத்தும் சுயாதீன சர்வதேச கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக வலியுறுத்துகின்றனர். இன்று செம்மணியில் மண்ணை அகழும் ஒவ்வொரு கருவியம் இலங்கையின் அதிகாரபூர்வ வரலாற்றைச் சவாலுக்கு உட்படுத்துகிறது.

மண்ணுக்குள் இருந்து வெளிவரும் ஒவ்வொரு எலும்புக்கூடும், எங்கள் தேசத்தில் வாழ்ந்த மனிதர்கள், தமிழர்கள் என்ற காரணத்தால், காணாமல் ஆக்கப்பட்டார்கள், இப்படியாக மனிதர்கள் கூட்டாக திட்டமிட்டுக்கொன்றழிக்கப்பட்டது இனப்படுகொலை என்பதை உலகிற்குச் சாட்சி சொல்கிறது.

இப்படியாக செம்மணி மண் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறது. அந்தக் குரலை உலகம் கேட்கிறதா? என்பதே இன்றைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

வத்தளை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது!

வத்தளை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது!

வாகனச் சோதனையில் 24 ஓட்டுநர்களுக்குத் தடை உத்தரவு!

வாகனச் சோதனையில் 24 ஓட்டுநர்களுக்குத் தடை உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 30 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026