உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!
உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த லோரி மற்றும் டோரி என்ற 62 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக ஒட்டிப்பிறந்தனர்.
மண்டை ஓடுகள்
பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய இரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை சுகயீனம் காரணமாக தற்போது உயிரிழந்துள்ளனர்.
கின்னஸ் நிறுவனம்
கடந்த 2007 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்களான இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உட்பட உலக அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
மேலும் இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |