இலங்கையைச் சேர்ந்த குழந்தை உலக சாதனை (படம்)
இலங்கையைச் சேர்ந்த குழந்தை உலக சாதனை
இலங்கையைச் சேர்ந்த இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்து சர்வதேச சாதனை புத்தகத்தில் தனது பெயரினை பதிவு செய்துள்ளது.
கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய நுஹான் நுஸ்கி எனும் குழந்தையே உலக சாதனை படைத்து சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு குறித்த குழந்தை சாதனை படைத்துள்ளது.
சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை
அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது உலக குழந்தை எனும் அந்தஸ்தை நுஹான் நுஸ்கி எனும் குழந்தை தனதாக்கிகொண்டுள்ளார்.
இந்தக் குழந்தை கடந்த வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்