உலகின் மிகப்பெரிய அரியவகை ஊதா மாணிக்கக்கல் இலங்கையில் அறிமுகம்!
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய வகை மாணிக்கக்கல், 3,563 கரட் எடையைக் கொண்டுள்ளது.
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் இதுவே மிகப்பெரியது எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மாணிக்கக்கல்
இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், Star of Pure Land எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாணிக்கக்கல், ஆறு கதிர் கொண்ட நட்சத்திர வடிவத்தைக் கொண்டுள்ளதுடன் ஏனைய கற்களை விட மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.

இதன் பெறுமதி 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாணிக்கக்கல்லை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை மாணிக்கக்கல் ஆய்வுகூடத்தின் பிரதம இரத்தினக்கல் ஆய்வாளர் அஷான் அமரசிங்க இந்த விபரங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |