காசாவிற்காக முன்வரும் உலகின் முதல் பணக்காரன்!
இஸ்ரேல் காசா போர் நாளுக்கு நாள் வலுக்கும் நிலையில் காசா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் காணி உறவுகளுக்கு தற்போது அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தனக்கு தெரியாது என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000ஐ தாண்டியுள்ளது.
இஸ்ரேலின் வான் மற்றும் தரைத் தாக்குதல்களால் காசா பகுதியில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் காசா மக்கள் தற்போது உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, காசா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.