மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாடு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு மட்டக்களப்பில் (Batticaloa) மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (02) கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மான்மியத்தையும், வளங்களையும், பண்பாடுகளையும் பிரதிபலிக்கும் முகமாக கலைஞர்களினதும் மாணவர்களினதும் பண்பாட்டு பவனி கல்லடி பாலத்தருகில் இருந்து வெபர் மைதானம் வரையில் இடம்பெற்றது.
திருவள்ளுவர் சிலை
மட்டக்களப்பு மாநகரில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாக அமைந்துள்ள சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உலகத் தமிழ் கலை இலக்கிய கருத்தரங்கத் தலைவர் முனைவர் க.சுபஷினி, மலேசியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் கல்லாறு சதீஸ், கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் குலேந்திரகுமார், மற்றும் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













