டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு
2026 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாடு, “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” (Classical Tamil and Tamils in the Age of Artificial Intelligence) என்ற நவீன கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், செம்மொழித் தமிழின் முக்கியத்துவம் மற்றும் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் மாநாட்டில் முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நேரில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் ஏற்பாட்டாளர்களான அனைத்துலகத் தமிழர் பேரவை (Federation of Global Tamils) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |