உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி இணைந்து சிரமதானம் மரபுரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் விழிப்புணர்வு பலகை திரை நீக்கமும் நடைபெற்றது.
நேற்றைய தினம் (27 )உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கையின் புராதன சின்னமாக விளங்குகின்ற கோட்டையை அண்டிய பகுதிகள் சிரமதான பணி மூலம் இன்று சுத்தம் செய்யப்பட்டன.

பாதுகாப்பு நடைமுறைகள்
கோட்டை வெளிப்புறத்தில் முதன்முதலாக AK.கமல் படப்பிடிப்பாளர்கள் சாயி போட்டோ நிறுவனத்தினரின் அனுசரணையுடன் மரபுரிமை பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான பலகையும் தொல்லியல் திணைக்களத்தினரால் நாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண கோட்டை பொறுப்பதிகாரி பாலசுப்பிரமணியம் கபிலன் திணைக்கள அதிகாரிகாரிகள் யாழ் பல்லைக்கழக கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்