உலகின் பிரமாண்ட கப்பல் பயணம் ஆரம்பம்
றோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கிய உலகின் மிகவும் நீளமான பயணிகள் போக்குவரத்து கப்பல் இன்றையதினம் தனது பயணத்தை தொடங்கியது.
20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன.
அனைத்து பொழுது போக்கு அம்சங்களும்
ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது.
10 ஆயிரம் பேருடன் பிரமாண்ட கப்பல்
3 தியேட்டர்கள், 40 ஹோட்டல்கள், பார்கள் இருக்கின்றன. இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண்ட கப்பல் தனி உலகமாக கடலில் உலா வரும். இந்த கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |