உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த டிரம்ப்!
உலகத்தின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதன் முறையாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 6.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் முறையாக டொனால்ட் டிரம்ப் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார்.
குற்றவழக்குகளின் விசாரணை
இந்நிலையில் அவர் மீதான குற்றவழக்குகளின் விசாரணையும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, அதன்படி டிரம்ப் மீதான நிதி மோசடி வழக்கில், சுமார் 500 மில்லியன் டொலர் உறுதித் தொகையை கட்ட நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான மேன்முறையீட்டு வழக்கில் இந்தத் தொகை 175 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டது, இந்த சூழலிலேயே பங்குச்சந்தையில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் மதிப்பு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
பங்குகளின் மதிப்பு
ஆனால் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களுக்கான பங்குகளின் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளதாகவும், அவரது நிகர மதிப்பு மொத்தமாக 4 பில்லியன் டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சர்ச்சைகளுக்குள் அகப்பட்டுள்ள நிலையில், தற்போது டிரம்ப் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |