உலகில் முதல் 100 சிறந்த விமான நிலையங்கள் எவை தெரியுமா..!
உலகெங்கிலும் உள்ள 565 விமான நிலையங்களின் சேவை குறித்து ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் பயணிகளிடம் ஆய்வு நடத்தி உள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் உலகில் சிறந்த முதல் 100 விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கைட்ராக்ஸ் என்பது, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் தரவரிசை, மதிப்பீடு மற்றும் விருது வழங்கும் ஒரு பிரிட்டிஷ் விமான போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனமாகும்.
முதலிடத்தில் சிங்கப்பூர் விமான நிலையம்
முதலிடத்தில் சிங்கப்பூர் விமான நிலையம் இடம்பிடித்துள்ளது. சாங்கி விமான நிலையம், 13ஆவது முறையாக உலகின் தலைசிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றதை ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட்வர்ட் பிளெய்ஸ்டெட் தெரிவித்தார். இதனுடன் சாங்கி விமான நிலையம் மொத்தம் 697 விருதுகளைப் பெற்று, அதிக விருதுகளைப் பெற்ற விமான நிலையமாகத் திகழ்வதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
இதேவேளை இந்த 100 விமான நிலையங்களில் இலங்கை விமான நிலையம் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தரவரிசையில் முதல் 20 விமான நிலையங்கள் வருமாறு,
சாங்கி விமான நிலையம் (சிங்கப்பூர்)
ஹமாத் சர்வதேச விமான நிலையம் (தோஹா)
ஹனேடா விமான நிலையம் (டோக்கியோ)
இன்சியான் சர்வதேச விமான நிலையம் (சியோல்)
நரிடா சர்வதேச விமான நிலையம் (டோக்கியோ)
ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம்
சார்லஸ் டி கோல் விமான நிலையம் (பாரிஸ்)
ரோம் பியமிசினோ விமான நிலையம்
மியூனிக் விமான நிலையம் (ஜெர்மனி)
சூரிச் விமான நிலையம் (சுவிட்சர்லாந்து)
துபாய் சர்வதேச விமான நிலையம்
ஹெல்சின்கி விமான நிலையம்
வான்கூவர் சர்வதேச விமான நிலையம் (கொலம்பியா)
இஸ்தான்புல் விமான நிலையம் 15. வியன்னா சர்வதேச விமான நிலையம்
மெல்போர்ன் விமான நிலையம் 17. சென்ட்ரேர் சர்வதேச விமான நிலையம்
கோபன்ஹேகன் விமான நிலையம்
ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம்
பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம்
[
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
