மூன்றாம் உலகப் போருக்கான வழி! புடினின் கருத்துக்கு மொசாட் மறைமுக எச்சரிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்த வாழ்த்து தொடர்பில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தனது நிலைப்பாட்டை அறிவித்துயள்ளது.
மூன்றாம் உலகபோர் என்ற வார்த்தையை அடிகோடிட்டு மொசாட் தனது எக்ஸ் தளத்தில் குறித்த பதிவை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் மொசாட் வெளியிட்ட பதிவில்,
🚨 IS THE GAME BOARD FOR WWIII NOW TAKING SHAPE?
— Mossad Commentary (@MOSSADil) March 9, 2026
Russia’s President Vladimir Putin has congratulated Mojtaba Khamenei on becoming Iran’s new Supreme Leader.
Putin said:
“I am confident that you will continue your father’s work with honor and unite the Iranian people in the face… pic.twitter.com/ieY4lFRIKO
மொஜ்தபா காமெனி
“மூன்றாம் உலகப் போரின் விளையாட்டு வாரியம் இப்போது வடிவம் பெறுகிறதா?

ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனிக்கு விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புடின் கூறினார்: “நீங்கள் உங்கள் தந்தையின் பணியை மரியாதையுடன் தொடர்வீர்கள் என்றும், ஈரானிய மக்களை எதிர்கொண்டு ஒன்றிணைப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.” என மொசாட் தனது பதிவில் தெரிவித்துள்ளது.
ஈரானிய நிபுணர்கள் சபை அயதுல்லா அலி காமெனியின் மகனான சையித் மொஜ்தபா காமெனியை நாட்டின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது.
இது 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு முதல் முறையாக தந்தை-மகன் வாரிசு மரபாக அமைந்துள்ளது.
அலி காமெனி கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் (Operation Epic Fury) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போர் 10ஆம் நாளில் தொடர்ந்து வரும் நிலையில் இந்தத் தேர்வு நடைபெற்றுள்ளது.
மொஜ்தபா காமெனி (வயது 56) IRGC (இஸ்லாமிய புரட்சிகர காவல்படை) உடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் எனவும், தனது தந்தையை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவர் எனவும் அறியப்படுகிறார்.
இந்நிலையிலேயே விளாடிமிர் புடின் உடனடியாக மொஜ்தபா காமெனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரெம்ளின் அறிக்கை
கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின்படி, புடின் கூறியுள்ளது:

“நீங்கள் உங்கள் தந்தையின் பணியை மரியாதையுடன் தொடர்வீர்கள் என்றும், ஈரானிய மக்களை எதிர்கொண்டு ஒன்றிணைப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன். தற்போதைய கடுமையான சோதனைகளுக்கு (severe trials) மத்தியில் தைரியத்துடன் செயல்பட வேண்டும்.
ரஷ்யா ஈரானுக்கு உறுதியான ஆதரவு (unwavering support) தொடரும்.” என தெரிவித்துள்ளார்.
இது ரஷ்யா-ஈரான் இடையேயான நெருக்கமான உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
IRGC மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் கலிபாஃப் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மொஜ்தபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த பின்னணியிலேயே மொசாட் குறித்த கருத்தை பதிவுசெய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |