உலகளவில் சாதனை உச்சத்தை எட்டிய தங்க விலை...!
உலகளவில் தங்கத்தின் விலை இன்று (8) புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 170 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய, இந்த வாரத்தில் இதுவரை 4.1 வீதத்தால் தங்க அவுன்ஸின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்துக்கான தேவை
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் இடைப்பகுதியில் பதிவான விலை அதிகரிப்பை விட இது அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உச்ச விலை
இந்த நிலையில், முதல் தடவையாக கடந்த செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை உச்சம் தொட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 400 அமெரிக்க டொலர்களாக பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்