விவசாயிகளுக்கு அதிர்ச்சி -மானிய உரத்தில் புழுக்கள்
Mahinda Amaraweera
Sri Lanka
By Sumithiran
விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா மானிய உர்த்தில் புழுக்கள் காணப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ் பெறப்பட்ட யூரியா உரத்தில் புழுக்கள் இருப்பதாக மகாவலி பி பிராந்தியத்தின் திம்புலாகல மனம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உர மாதிரிகள் கூடுதல் பரிசோதனை
அதன்படி மனம்பிட்டி விவசாய சேவை நிலைய அதிகாரிகளும் இதனை பரிசோதிக்க வந்துள்ளனர். பின்னர், உர மாதிரிகள் கூடுதல் பரிசோதனைக்காக வேளாண் துறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
எனினும், யூரியா, அமோனியா இரசாயன உரம் என்றும், அதில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்றும் தேசிய உர செயலகம் கூறியுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி