இரவு உணவுக்கு ரொட்டி வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Sri Lanka
By Harrish
திவுலப்பிட்டிய - கெஹெல் எல்ல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மூன்று ரொட்டிகளில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்றிரவு(12) இந்த ரொட்டியை கொள்வனவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன்போது, ரொட்டிகளை சாப்பிடத் தயாராகும் வேளை அதில் புழுக்கள் இருந்தமை தெரியவந்துள்ளது.
உணவில் கிடந்த புழு
இந்நிலையில், உணவு கொள்வனவு செய்யப்பட்ட ஹோட்டலுக்கு சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நபர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மீன் பணிஸில் லைட்டரின் பாகங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்