உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா மன்னாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவர் நேற்று (16.02.2024) வியாழக்கிழமை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது புகழ் பெற்ற மடு ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இராமேஸ்வரத்திற்கு விஜயம்
அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட மன்னார், நானாட்டான் மற்றும் முசலி மாந்தை மேற்கு பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளை வைபவரீதியாக வழங்கி வைத்துள்ளார்.
மேலும் தலைமன்னார் இராமேஸ்வரம் கடல் வழிபாதையில் அமைந்திருக்கும் தீடை பகுதிக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
திருக்கேதீஸ்வரம்
இதனுடன் நேற்று(15) இரவு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயத்தில் எச்.இ.சந்தோஷ்ஜாவின் துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |