பறிபோகப்போகும் சரத் பொன்சேகாவின் பதவி! வெளியானது காரணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கட்சியின் அரசியல் கொள்கைகளை மீறும் வகையில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டதை தொடர்ந்து, குறித்த நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் அண்மை நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதவி நீக்கம்
அத்துடன், எச்சரிக்கைகளையும் மீறி ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சரத் பொன்சேகா தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வந்ததாக அந்த கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து அவரை நீக்க கட்சியின் தலைவர் தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
அத்துடன், கட்சியில் இருந்து அவரை முழுமையாக நீக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர், தான் அரசியல் ரீதியிலான தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 14 மணி நேரம் முன்
