முறையற்ற பாலியல் தொடர்பு - இந்திய வீரர் ஷமிக்கு எதிராக அவர் மனைவி மேன்முறையீடு!
இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் ஷமிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த கல்கத்தா மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் இந்திய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கல்கத்தா மேல் நீதிமன்ற கடந்த மார்ச் 28ஆம் திகதி வழங்கிய உத்தரவை இரத்து செய்யக்கோரி மேன்முறையீட்டு மனுவை ஷமியின் மனைவி சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்துள்ளார்.
முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு மொஹமட் ஷமிக்கு எதிராக வீட்டு வன்முறை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை முன்வைத்து மனைவி ஹசின் ஜஹான் ஜாதவ்பூர் காவல்துறையில் முறைப்பாடு அளித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இருப்பினும் ஷமி தொடர்ந்து அந்த குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், அவரை பிரிந்துள்ள மனைவி குறித்த வழக்கை விடாமல் தொடர்ந்து வருகின்றார்.
2018 ம் ஆண்டு ஷமி மற்றும் அவரது மூத்த சகோதரர் ஹசிப் அகமது ஆகியோர் கொல்கத்தா காவல்துறையின் மகளிர் குறை தீர்ப்புப் பிரிவால் விசாரிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், அலிபூர் நீதிமன்றம் ஷமிக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்தது.
எவ்வாறாயினும், குறித்த பிடியாணை உத்தரவு பின்னர் நீதிமன்ற உத்தரவில் இடைநிறுத்தப்பட்டது.
விசாரணை
பின்னர், ஷமி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக ஹசின் ஜஹான் கூறியதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊழல் தடுப்பு பிரிவு ஷமிக்கு எதிரான விசாரணைகளை நடத்தியது.
அவரது மனைவி ஹசின் ஜஹான் முன்வைத்த மனுவில், ஷமி தனது கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின் போது, இன்றைய காலம் வரையிலும், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வழங்கிய விடுதி அறைகளில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் மற்றும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் தன்னை தாக்கியதுடன், தொடர்ந்தும் வரதட்சணை கேட்டு வந்தனர் எனக் கூறியுள்ளார்.