டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - இந்திய அணிக்கு இமாலய இலக்கு..!
புதிய இணைப்பு
டெஸ்ட் உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணிக்கு 444 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 8 விக்கட் இழப்பிற்கு 270 ஓட்டங்களை பெற்றிருந்த வேலை(270/8d) ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.
இந்நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு 444 என்ற இமாலய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப பட்டுளம்மை குறிப்பிடத்தக்கது.
India have a stiff target to chase down to win the #WTC23 title ?
— ICC (@ICC) June 10, 2023
Follow the #WTC23 Final ? https://t.co/wJHUyVnX0r pic.twitter.com/yLYEqqTu6w
இரண்டாம் இணைப்பு
டெஸ்ட் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் நான்காவது நாளான இன்று தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 6 விக்கட் இழப்பிற்கு 225 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மூன்றாம் நாள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 124 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்திருந்தது.
இந்நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா அணி 6 விக்கட் இழப்பிற்கு 225 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மேலும் இந்திய அணியை விட அவுஸ்திரேலியா அணி 396 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி தனது மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்களை எடுத்துள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக அவுஸ்திரேலிய அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. எனினும் ரஹானே மற்றும் ஜடேஜாவின் ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
இரண்டாவது இன்னிங்ஸ்
இறுதியில் இந்திய அணி 296 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரஹானே 89 ஓட்டங்களையும், சர்தூல் தாகூர் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து 173 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான வார்னர்(1) மற்றும் கவாஜா(13) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 34 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் 18 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் லபுஸ்சன் 41 ஓட்டங்களையும், க்ரீன் 7 ஓட்டங்களையும் பெற்று விளையாடி வருகின்றனர்.
