தீ பிடித்த கப்பலின் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் கைது- நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
arrest
court
sri Lanka
x press pearl ship
By Kalaimathy
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவன தலைவர் அர்ஜுன ஹெட்டியாரச்சி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதை பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண உறுதிப்படுத்தியிருந்தார்.
இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணைகளிலும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி