'எக்ஸ்-பிரஸ் பேர்ள்' இழப்பீட்டு பேச்சுவார்த்தையில் மோசடி - சிஐடி விசாரணை
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து நட்டஈடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று, பிரித்தானிய வங்கியொன்றின் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இதனை விசாரிக்குமாறு காவல்துறை மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இழப்பீட்டு பேச்சுவார்த்தை

“எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து இழப்பீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு தரப்புக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.
இது உண்மையா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை, சிஐடி விசாரிக்கிறது" என அவர் இதன்போது கூறியுள்ளார்.
Sri Lanka's Justice Minister requests investigation into alleged $250 million bribe paid to a party involved in X-Press Pearl fire compensation negotiations. Funds reportedly transferred to a London bank account. "I got this info, I don't know it's true or not, CID inquiring it"… pic.twitter.com/Od0H5650L7
— NewsWire ?? (@NewsWireLK) April 13, 2023