அபாயத்தை எதிர்கொள்ளும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி - ஜின்பிங் அதிருப்தி
சீனா ஒரு கட்சி முறையை அடிப்படையாக கொண்ட நாடு என்றவகையில், அங்குள்ள பிராதானமான கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஆகும்.
இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் ஒரே ஒரு கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அழிவடைந்துவிடும் அபாய நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அபாய கட்டத்தில் சீனா

இம்மாத துவக்கம் முதல் சுமார் 41.5 கோடி பேர் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு இளம் தொண்டர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றும் தற்போது வெளிவந்திருக்கிறது.
அதில் மார்க்ஸிஸ மற்றும் கம்யூனிஸ கொள்கைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் 90களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்டதை போன்று சீனாவிலும் கம்யூனிஸம் அழிந்து, சீனாவும் சுக்குநூறாகி விடும் அபாயம் உள்ளதாக கூறியிருக்கிறார்.