பாரிய அரசியல் பொறியில் சிக்கிக்கொண்டுள்ள ஜி. எல். பீரிஸ்
கூட்டு எதிர்க்கட்சி எனத் தங்களைக் காட்டிக்கொண்டு வாரந்தோறும் சிறப்புக் கலந்துரையாடல்களை நடத்தி வந்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸும் அவரது குழுவினரும் தற்போது ஒரு பொறியில் சிக்கியுள்ளதாகத் அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் மீண்டும் ஒன்றிணைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பொது எதிர்க்கட்சியை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இருப்பினும், கூட்டு எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் குழுக்கள் என்று கூறிக்கொள்ளும் குழுவின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
சலேவை மையமாகக் கொண்ட திட்டம்
அதன் பிறகு, ஜி.எல். பீரிஸும் அவரது குழுவும் மிகுந்த கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர். ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் பிறருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, ஜி. எல். பீரிஸ் பொதுமக்களிடையே அச்ச உணர்வை உருவாக்க முயன்றார் என குற்றச்சாட்டுக்களும் வலுத்துள்ளன.

அது முற்றிலுமாகத் தோல்வியடைந்த பின்னர், சுரேஷ் சலேவை மையமாகக் கொண்டு மக்கள் போராட்டத்தை உருவாக்கும் முயற்சியும் மேலும் தோல்வியடைந்தது.
இந்தச் சூழ்நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மக்கள், ஊடகக் கூட்டங்களில் பேசுவதற்கு எந்த ஒரு தலைப்பும் இல்லாத ஒரு நிராதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |