ஈரான் விரும்பிய கொள்கைகள்..! பேச்சுவார்த்தை தொடர்பில் JD வான்ஸ் அறிவிப்பு
பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தங்கள் எப்போதுமே சற்று சிக்கலானவை தான். பிராந்தியம் முழுவதும் ஒரு முழுமையான போர்நிறுத்தத்தைக் காண்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார் என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்ட சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை அதிகாலையில் முடிவடைந்ததுள்ளது.
ஈரான் விரும்பியதைப் பெற்றது
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் முதல் நாளில் அமெரிக்காவும் ஈரானும் "சிறப்பான முன்னேற்றத்தை" அடைந்துள்ளதாக மத்தியஸ்தர்களான பாகிஸ்தானும் கத்தாரும் தெரிவித்துள்ளன.

ஈரான் தான் விரும்பியதைப் பெற்றதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
லெபனான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் அரசின் மத்தியஸ்தம் பெரும் முன்னேற்றத்தை அளித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |