ஒரே ஒரு சீனா மட்டுமே! தாய்வான் விவகாரத்தில் ட்ரம்பை நேரடியாக எச்சரித்த ஷி ஜின்பிங்
பெய்ஜிங்கில் நடைபெறும் அமெரிக்கா - சீனா இடையேயான உச்சிமாநாட்டில் தாய்வான் விவகாரம் இரு நாடுகளையும் மோதலுக்குள் தள்ளிவிடும் என ஷி ஜின்பிங்கை எச்சரித்தமையானது பேசுபொருளாகியுள்ளது.
இது குறித்த விவாதத்தில் சீன ஜனாதிபதி, “இரு தரப்பினரும் போட்டியாளர்களாக இருக்க வேண்டுமே தவிர எதிரகளாக அல்ல" எனவும் கூறியுள்ளார்.
இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்த நேற்றைய இந்த பேச்சுவார்த்தைகளில் சீனா - அமெரிக்க உறவுகளில் தாய்வான் பிரச்சினைதான் மிக முக்கியமான விடயம் என வெளிப்படுத்தப்பட்டது.
தாய்வான் குறித்த நகர்வு
இதற்கமைய சீன ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்களின் படி, தாய்வான் குறித்த நகர்வு தவறாகக் கையாளப்பட்டால், இரு நாடுகளும் மோதிக்கொள்ளக்கூடும் அல்லது மோதலில் கூட ஈடுபடக்கூடும். இது ஒட்டுமொத்த சீனா - அமெரிக்க உறவையும் மிகவும் அபாயகரமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்று ஷி வெளிப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ட்ரம்புக்கு பெய்ஜிங் வழங்கிய அனைத்தும், அதாவது, கனிவான அணுகுமுறை, நட்புறவு, இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்கக் கரம் நீட்டுதல் போன்றவை, இலவசமானவை அல்ல என்றும், அவை ஒரே ஒரு நிபந்தனைக்கு உட்பட்டவை எனவும் ஊடகங்கள் விளக்கியுள்ளன.
இதன் மையக்கருத்து ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது என்பதையும், தாய்வானைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் பெய்ஜிங் மிகவும் தீவிரமாக உள்ளது என்பதையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |