மீண்டும் திறக்கப்பட்டது யால தேசிய பூங்கா
வெள்ளம் சூழ்ந்த நிலையில் மூடப்பட்ட யால தேசிய பூங்கா இன்று (16ம் திகதி) காலை சுமார் 75 வீதமான பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
இது தொடர்பாக யால பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன கூறுகையில்,
தற்போது மழையுடனான காலநிலை குறைவடைந்த காரணத்தால் யால பூங்காவின் இரண்டு பிரதான நுழைவாயில்கள் உட்பட அனைத்து வீதிகளும் யால பூங்காவிலுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளும் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
வெள்ளத்தினால் வீதிகள் படு சேதம்
யால பூங்காவைச் சுற்றி 145 கிலோமீற்றர்கள் இருந்தாலும், அதில் 75 கிலோமீற்றர் வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முடியும் எனவும், வெள்ளத்தினால் யால வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சாரதிகள் மிகுந்த பாதுகாப்புடன் மற்றும் எச்சரிக்கையுடன் வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
யால பூங்காவை வெள்ளத்திற்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்க இந்த ஆண்டு எடுக்கும், மேலும் சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன் யால தேசிய பூங்காவில் சேதமடைந்த சாலைகள் புனரமைக்கப்படும்.
அனுமதி சீட்டுக்களின் விலையும் அதிகரிப்பு
மேலும் யால தேசிய பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுலா பங்களா அடுத்த மாதம் திறக்கப்படும் என்றார். யால தேசிய பூங்கா அனுமதி சீட்டுக்களின் விலைகளும் வற் வரி அதிகரிப்பால் மூன்று சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |