விடுதலைப்புலிகளுக்கு எதிராக அமெரிக்காவை திருப்பிய யேமன் தாக்குதல்
இறுதி யுத்தத்தில் அமெரிக்கா கடற்புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், பலுத்துடன் இருக்கும் போது கொண்டாடுவார்கள், ஆனால் பலம் குறைந்து விட்டால் அனைவரும் சேர்ந்து மிதிப்பார்கள். இது உலக நியதி.
இன்றிருக்கும் தலைவர்களுக்கும் இவை படிப்பினையாகும். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் அமெரிக்கா கடற்புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது.
அமெரிக்க ஆதரவு
அதாவது யேமனிலுள்ள அமெரிக்க தளத்திற்கு அல்கொய்தா தாக்குதல் நடத்தியது. அதன் தொழில்நுட்பத்திற்கு விடுதலைப் புலிகளே உதவியது என்ற கருத்து பரப்பப்பட்டது. இதனாலையே அமெரிக்கா எங்கள் பக்கம் சார்ந்தது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அவுஸ்திரேலியா கடல் பரப்புக்கு சென்று விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றை முறியடிக்க அமெரிக்காவும் உதவியது.
அவ்வாறு செய்திருக்காவிட்டால் இன்று யுத்தம் முடிவில்லாமல் தொடர்ந்திருக்கும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
