அமெரிக்க கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹவுதி! செங்கடலை அடுத்து அரபிக்கடலிலும் பதற்றம்
அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்களின் மீது ஹவுதி படையினர் அண்மைய நாட்களில் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் தற்போது அரபிக்கடலிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மேலும், கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, இந்த தாக்குதலினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருகிறது.
அதனை எடுத்துக்காட்டும் விதமாக, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கப்பல்கள் மீது தாக்குதல்
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து சமீபத்தில் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களின் விளைவால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
இந்நிலையில், காசா முனையில் பலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள், அரபிக் கடல், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செங்கடலில் மீண்டும் பதற்றம்! அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |