ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்
யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 ஆம் திகதி இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது முதல் முறையாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர்.
இஸ்ரேல் பிரதமர் சூளுரை
இந்த தாக்குதலை அடுத்து அங்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் என இஸ்ரேல் பிரதமர் சூளுரைத்திருந்தார்.
பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து, யேமனின் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தபோவதாகவும் அப்பகுதிவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 6) எச்சரிக்கை விடுத்தது.
இந்த எச்சரிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே யேமனின் தலைநகர் சனாவின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தது. இந்தத் தாக்குதலில் யேமனின் முக்கிய சர்வதேச விமான நிலையம் முழுவதுமாக தகர்க்கப்பட்டு சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில், விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதை ஹவுதி படைகளின் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
